வங்காளதேச விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்
வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
நாக்பூர்,
வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு பிமான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல நேற்று இரவு 396 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. நள்ளிரவில் இந்திய வான்பரப்பில் விமானம் சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். உடனடியாக அருகில் உள்ள நாக்பூர் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டனர். அதிகாரிகள் அனுமதி அளித்ததும் நாக்பூர் ஏர்போர்ட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.