ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-07-21 09:59 IST

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் இன்று 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய நேரப்படி அதிகாலை 1.36 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.17 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.87 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்