உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில் திடீர் நிலநடுக்கம்

உத்தரபிரதேசத்தில் இன்று காலை 8.44 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-06-01 19:10 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 8.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 28.87 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.87 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்