இந்திய பயணம் நிறைவு: இங்கிலாந்து புறப்பட்டார் கீர் ஸ்டார்மர்
இருநாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.;
மும்பை,
2 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று முன் தினம் இந்தியா வந்தார். மும்பை வந்த அவருக்கு இந்திய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றப்பின் கீர் ஸ்டார்மர் மேற்கொண்ட முதல் இந்திய பயணம் இதுவாகும்.
அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இந்நிலையில், 2 நாட்கள் இந்திய பயணத்தை நிறைவு செய்த கீர் ஸ்டார்மர் நேற்று இரவு இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டார்மர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.