நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.;
புதுடெல்லி,
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 16-ந்தேதி வரையிலான கணக்கீட்டின்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 530 கோடி (14.17 பில்லியன் டாலர்கள்) உயர்ந்து ரூ.63 லட்சத்து 12 ஆயிரத்து 240 கோடி (701.36 பில்லியன்) ஆக உயர்ந்தது.
வெளிநாட்டு நாணய சொத்துகள் ரூ.86 ஆயிரத்து 850 கோடி (9.65 பில்லியன்) உயர்ந்து ரூ.50 லட்சத்து 44 ஆயிரத்து 680 கோடி (560.52 பில்லியன்) ஆனது. தங்கம் கையிருப்பு ரூ.41 ஆயிரத்து 580 கோடி (4.62 பில்லியன்) உயர்ந்து ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 50 கோடி (117.45 பில்லியன்) ஆனது.
சிறப்பு வரைவு உரிமைகள் ரூ.315 கோடி (35 மில்லியன்) சரிந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 336 கோடி (18.704 பில்லியன்) ஆக உள்ளது. சர்வதேச நிதியத்தில் இந்திய கையிருப்பு ரூ.657 கோடி (73 மில்லியன்) சரிந்து ரூ.42 ஆயிரத்து 156 கோடி (4.684 பில்லியன் டாலர்) ஆக உள்ளது