‘ஜனாதிபதியின் குடியரசு தின உரை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது’ - பிரதமர் மோடி பாராட்டு

ஜனாதிபதியின் உரை அரசியலமைப்பின் தனித்துவத்தை வலியுறுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-25 22:03 IST

புதுடெல்லி,

இந்தியாவின் 76-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில், “இந்திய இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் முன்னேற்றம் அடைகின்றனர்.

விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். நமது நம்பிக்கைக்குரிய இளைஞர்கள் மற்றும் குழந்தைகள், அவர்களின் திறமைகள் மற்றும் பங்களிப்புகளால் பிரகாசமான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் குடியரசு தின உரை நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். நமது அரசியலமைப்பின் தனித்துவத்தை சரியாக வலியுறுத்தி, நமது நாட்டை முன்னோக்கி அழைத்துச் சென்ற கூட்டு மனப்பான்மையை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கும் ஒவ்வொரு இந்தியனையும் ஊக்குவிக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்