கோவா கடற்கரை அருகே நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதல் - 2 மீனவர்கள் மாயம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்து ஏற்பட்டது.;

Update:2024-11-22 15:14 IST

பனாஜி,

கோவா கடற்கரையில் இருந்து சுமார் 70 கடல் மைல்கள் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. அந்த மீன்பிடி படகில் மொத்தம் 13 மீனவர்கள் இருந்துள்ளனர்.

இந்த விபத்தால் மீன்பிடி படகு சேதமடைந்து கடலில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்