மராட்டியம்: கட்டுமான தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி

5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-02-22 13:19 IST

ஜல்னா,

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தின் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வரும் அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

கட்டுமான தளத்தில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருப்பதை அறியாத லாரி டிரைவர் கொட்டகையில் மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உள்பட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்