டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு - விமான சேவை பாதிப்பு

விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.;

Update:2025-11-07 10:25 IST

கோப்புப்படம் 

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த கோளாறு சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தொடர்பான புதுப்பிப்புகளுக்கு (Updates) அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்