பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம் - நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்,ஆகஸ்ட் 1 முதல் 125 யூனிட் இலவச மின்சாரம் அமலுக்கு வருகிறது.;

Update:2025-07-17 12:32 IST

பாட்னா,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவரது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது :

மக்கள் பயன்பெறும் வகையில் மி்ன் நுகர்வில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 125 யூனிட் வரை எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இது வரும் ஆக.1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 1. 67 கோடி பேர் பயன்பெறுவர்.

சூரியசக்தி மின்சார திட்டமும் மேலும் பரவலாக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு குதிர் ஜோதி யோஜனா மானியம் வழங்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் உற்பத்தி உபகரணங்களும் வழங்கப்படும், இது மின் நெருக்கடியைக் குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்