ஐ.டி. ஊழியர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 44). இவர் சென்னையில் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வேலை அதிகமாக இருக்கும் நாட்களில் அடிக்கடி சென்னையிலேயே தங்கி வேலை செய்து வருவது வழக்கம். இந்தநிலையில், இவரது மனைவி வைஷ்ணவி (31) கடந்த 1-ந் தேதி இரவு கணவர் சென்னையில் இருப்பதால் வீட்டை பூட்டிக்கொண்டு 2 குழந்தைகளுடன் அருகில் அணைக்கட்டு ரோட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று இரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் ஆரம், 5 பவுன் நெக்லஸ், 5 பவுன் கல் வைத்த நெக்லஸ், ஒரு பவுன் கம்மல் என மொத்தம் 19 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து வைஷ்ணவி வாலாஜாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.