இந்தியா - சீனா இடையே அடுத்த மாதம் நேரடி விமான போக்குவரத்து
வரும் 28-ம் தேதி தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.;
புதுடெல்லி,
கொரோனா தொற்று மற்றும் எல்லை பிரச்சினை காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. வருகிற 28-ம் தேதி சீனாவின் தியான் ஜில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா எடுத்துள்ள வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. இந்தநிலையில்தான் இந்தியா - சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.