அரசு பஸ்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.;

Update:2025-09-12 05:47 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் இருந்து நேற்று அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காகோரி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது பஸ் மோதியது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்