அரியானா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-02-24 15:07 IST

File image

சண்டிகர்,

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் வெகு நேர போரட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படும் நிலையில் உயிரிதேசம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்