அரியானா: கனமழையால் பள்ளி வாகனம் மீது முறிந்து விழுந்த மரம்; மாணவர்கள் காயம்?

பள்ளி வாகனத்தின் மீது மரம் முறிந்து விழுந்த தகவல் அறிந்து அருகேயிருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update:2025-09-03 14:30 IST

பஞ்ச்குலா,

அரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வழியே இன்று ஒரு பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, மரம் ஒன்று முறிந்து அந்த வாகனத்தின் மீது விழுந்தது.

இதில், பள்ளி வாகனம் சிக்கி கொண்டது. அந்த வாகனத்தில் இருந்த மாணவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். அவர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து அருகேயிருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் சிலரை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். வழியில் கிடந்த மரத்தின் கிளைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்