கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரியில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2025-12-03 07:12 IST

கோப்புப்படம்

புதுச்சேரி,

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ பயுல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இந்தநிலையில் புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக உருமாறியது. தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறியது.

நேற்று இரவு 9 மணியளவில் இருந்து சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதற்கிடையே இன்றும் புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்