ஆணவ படுகொலை விவகாரம்: தேசிய பட்டியலின ஆணைய தலைவர் நாளை நெல்லை வருகை

தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார்.;

Update:2025-08-03 22:08 IST

சென்னை,

நெல்லையில் என்ஜினீயர் கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் இரு பட்டியலின சகோதரர்கள் படுகொலை சம்பவம் ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரு நிகழ்வுகளையும் கோடிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து என்பவர் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை (திங்கட்கிழமை) ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார். அதேநாளில் நெல்லை கவின்வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோர்களை சந்தித்து விசாரணை நடத்த உள்ளார். அதன் பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்