குடும்ப சண்டையில் மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவன்
உத்தரபிரதேசத்தில் குடும்ப சண்டையில் மனைவியின் உதட்டை கணவன் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
மதுரா,
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நக்லா புச்சான் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர் காரணமின்றி தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மனைவியை, விஷ்ணு காரணம் இல்லாமல் திட்டியுள்ளார்.
அப்போது, அந்த பெண் விஷ்ணுவை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். இதில் கடும் ஆத்திரம் அடைந்த விஷ்ணு மனைவி மீது பாய்ந்து அவரது உதட்டை கடித்து குதறியுள்ளார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உதட்டில் 16 தையல்கள் போடப்பட்டன.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.