நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு? - ஐஎம்எப் கணிப்பு
இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.;
டெல்லி,
ஐ.நா. சபையின் நிதி பிரிவு அமைப்பாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகளுக்கு நிதி உதவி அளிக்கிறது. மேலும், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை ஐஎம்எப் நேற்று வெளியிட்டது. அதன்படி நடப்பு ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கணிக்கப்பட்ட 6.4 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதம் அதிகமாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் இருந்த நிலையிலும் இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.