பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பிரதமர் மோடியை சந்தித்தார்.;

Update:2025-03-17 15:25 IST

டெல்லி,

5 நாட்கள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை உயர்மட்ட குழுவினர் வரவேற்றனர்.

இந்நிலையில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை இன்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சந்தித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர், இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Tags:    

மேலும் செய்திகள்