ரூ.50 நாணயத்தை வெளியிடுகிறதா மத்திய அரசு?
நாணயங்களின் எடை, அளவு உள்ளிட்ட காரணிளால் பயனர்கள் பெரும்பாலும் அவற்றைத் தவிர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
ரூ.50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2022ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், நாணயங்களின் எடை, அளவு உள்ளிட்ட காரணிளால் பயனர்கள் பெரும்பாலும் அவற்றைத் தவிர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் அதிக எடை கொண்ட நாணயங்களை விட எளிமையான ரூபாய் நோட்டுகளையே விரும்புவதால், தற்போது ரூ.50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது