சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ தடை - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அய்யப்பன் சிலையை நிறுவ கட்டுப்பாடு விதித்ததோடு, இதன் பேரில் நன்கொடை வசூலிக்கவும் தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;

Update:2025-07-19 14:31 IST

திருவனந்தபுரம்,

தமிழ்நாடு ஈரோட்டை சேர்ந்த டாக்டர் ஒருவர் சபரிமலையில் அய்யப்பனின் 2 அடி உயரம், 108 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலையை நிறுவ நன்கொடை வசூல் செய்து வந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சபரிமலை சிறப்பு கமிஷனர், சிலை அமைக்க தடை விதிக்க கோரி கொச்சியில் உள்ள கேரள ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் அய்யப்பன் சிலையை நிறுவ கட்டுப்பாடு விதித்ததோடு, இதன் பேரில் நன்கொடை வசூலிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அந்த தீர்ப்பில் சபரிமலை கோவிலில் அய்யப்பன் சிலை நிறுவ தனிநபர் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும், இதன் பேரில் நன்கொடை வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான அறிவிப்பை ஆன்லைன் தரிசன முன்பதிவு இணையதள பக்கத்தில் வெளியிட திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்