லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி
லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
பீகார்,
பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் (வயது 76). ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரான லாலு இன்று மாலை பாட்னாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல விருந்தார்.
இந்நிலையில், பாட்னா விமான நிலையத்திற்கு சென்றபோது லாலு பிரசாத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து லாலுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக பரஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, மேல்சிகிச்சைக்காக லாலு பிரசாத் இன்று இரவே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.