தனியார் ஓட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை...அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-01-01 10:53 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அர்ஷத் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அவர் கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அலியா(9), அல்ஷியா(19), அக்சா(16) மற்றும் ரஹ்மீன்(18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள் என்றும் ஐந்தாவது நபரான அஸ்மா என்பவர் அர்ஷத்தின் தாயார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களை சேகரிக்க நிறுத்தப்பட்டுள்ளன என்று லக்னோவின் துணை போலீஸ் கமிஷனர் ரவீனா தியாகி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்