முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-07-20 10:58 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மனிஷா நகர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஜெயஸ்ரீ (வயது74). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வீட்டருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நகைப்பறிப்பில் ஈடுபட்டது நாக்பூர் மன்காபூரில் உள்ள கண்பதிநகரை சேர்ந்த கன்கையா நாராயண் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களில் மேலும் 4 இடங்களில் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்க நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக அவர் போலீஸ் விசாரணையின் போது கூறியுள்ளார். போலீசார், கன்கையா நாராயணின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரி அமர்தீப் கிருஷ்ணராவையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்