திருப்பதியில் 3 பெண்களிடம் அடுத்தடுத்து தங்க நகை பறிப்பு
சாலையில் ஒரு பெண் வியாபாரியிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.;
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி அலிபிரி, எம்.ஆர்.பள்ளி, ரேணிகுண்டா சாலை என ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில், ரேணிகுண்டா சாலையில் நடந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். கரகம்பாடி சாலையில் ஒரு பெண் வியாபாரியிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.
கடந்த 3 மாதங்களாக திருப்பதியில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அத்துடன் பூட்டிய வீடுகளில் திருட்டுகள் சம்பவங்கள் நடப்பதும் அதிகரித்து வருகின்றன.
தங்க விலை உயர்வு, பிற மாநிலங்களை சேர்ந்த முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவு ஆகியவை குற்றங்களுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன. திருப்பதியில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.