இமாச்சல பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு - 6 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் இது வரை 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update:2025-03-30 20:04 IST

சிம்லா,

இமாச்சலின் குருத்வாரா மணிகரன் சாகிப் எதிரே இருக்கக்கூடிய குல்லு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

நிலச்சரிவுடன் சேர்ந்து செடிகள் மற்றும் மரங்களும் வேரோடு சாய்ந்ததால் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது

உடனடியாக சக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து இந்த நிலச்சரிவை அகற்றக்கூடிய பணியிலும் இதில் சிக்கி இருக்கக்கூடிய நபர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்