’ஏரியா’வில் ஆதிக்கம் செலுத்துவதில் தகராறு: சிறுவன் குத்திக்கொலை
தலைமறைவாக உள்ள மேலும் 2 சிறுவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.;
டெல்லி,
தலைநகர் டெல்லியின் கஞ்சாவால் சிறுவர்களுக்கு இடையே ஏரியாவில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இது தொடர்பாக சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 3 சிறுவர்கள் கொண்ட கும்பல் ஒரு சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளது.
அப்போது, ஒரு சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் 16 வயதான சிறுவனை சரமாரியாக குத்தியுள்ளான். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிறுவனை கத்தியால் குத்திக்கொன்ற மற்றொரு சிறுவனை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் பள்ளிப்படிப்பை பாதியில் இருந்து விட்டு கஞ்சா போதைக்கு அடிமையாகி அந்த ஏரியாவில் சுற்றித்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , தலைமறைவாக உள்ள மேலும் 2 சிறுவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.