கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற கொடூரத்தாய் - அதிர்ச்சி சம்பவம்

மகனின் உடலை சூட்கேசில் அடைத்து அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.;

Update:2025-05-12 15:53 IST

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி ராஜ்போன்ஷி. இந்த தம்பதிக்கு மிரோனி பர்மன் (வயது 10) என்ற மகன் இருந்தார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக பிகாஷ் பர்மனை விவாகரத்து செய்ய தீபாலி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் மகன் மிரோனி தனது தாயாருடன் வசித்து வந்தான்.

அதேவேளை, தீபாலிக்கு ஜோதிமொய் ஹலோய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு தீபாலியின் மகன் மிரோன் இடையூறாக இருந்துள்ளான். இதனால், ஆத்திரமடைந்த தீபாலி தனது கள்ளக்காதலன் ஜோதிமொய் ஹலோயிடன் சேர்ந்து மகன் மிரோனை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த சனிக்கிழமை இரவு மகன் மிரோனை கள்ளக்காதலுடன் சேர்ந்து ஜோதிமொய் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், மகனின் உடலை சூட்கேசில் அடைத்து அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.

ஆனால், நேற்று அப்பகுதியை சேர்ந்த நபர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு சூட் கிடந்ததை

பார்த்த அந்நபர் அதை திறந்து பார்த்துள்ளார். அதில், சிறுவன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்று உடலை சூட்கேசில் வீசியது தீபாலி என்பது தெரியவந்தது. இதையடுத்து தீபாலி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஜோதிமொய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்