அரை நிர்வாணமாக மாணவருடன் வீடியோ கால் - பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது

மாணவருடன் அரை நிர்வாண கோலத்தில் வீடியோ கால் பேசிய ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-07-30 16:33 IST

கோப்புப்படம் 

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் பள்ளி மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசிய 35 வயதான ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவி மும்பையில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடங்களில் சில காலமாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அந்த மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இது தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, மாணவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ஆசிரியையின் இந்த செயல் தனது மகனை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் வேறு ஏதேனும் மாணவருடன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களுக்காக அவரது சமூக ஊடக கணக்குகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்