ஓணம் கொண்டாடிய டெல்லி முதல்-மந்திரி
கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆக. 26 ஆம் தேதி தொடங்கிய ஓணம் கொண்டாட்டம் செப். 5ஆம் தேதியுடன் பிரமாண்டமாக நிறைவடைகிறது. அந்தவகையில், டெல்லி முதல்-மந்திரி அலுவலகத்தில் இன்று ஓணம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், டெல்லியில் வசித்துவரும் மலையாள குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் முதல்-மந்திரி ரேகா குப்தாவும் கலந்துகொண்டு கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் முதல்-மந்திரி ரேகா குப்தா பேசியதாவது;-
ஓணம் பண்டிகை கேரளத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும், ஏன்? உலகம் முழுவதும் கூட கொண்டாடப்படுகிறது. மலையாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுக்க உள்ளனர். டெல்லியில் 10 லட்சம் மலையாளக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.