தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி - மத்திய மந்திரி தகவல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.;

Update:2025-09-19 03:34 IST

புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால ைவப்பு நிதி நிறுவனத்தில் (இ.பி.எப்.ஓ.) 7 கோடிக்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகளை இ.பி.எப்.ஓ.வின் பாஸ்புக் போர்ட்டல் தளத்தில் பெறுகின்றனர். குறிப்பாக தங்கள் கணக்கு இருப்பு பரிசோதனை, தங்கள் பங்களிப்பு, பரிவர்த்தனை அல்லது பணம் எடுத்தல் உள்ளிட்ட சேவைகளை பெற்று வருகின்றனர்.

இதில் பல்வேறு சிரமங்களும் உள்ளன. இந்த சிக்கல்களை தீர்த்து ஒரே இடத்தில் அதாவது ‘லாக்-இன்’-ல் அனைத்து முக்கியமான சேவைகளையும் பெறுவதற்கு புதிய வசதியை இ.பி.எப்.ஓ. அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இ.பி.எப்.ஓ.வின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தில் ‘பாஸ்புக் லைட்’ என்ற லாக்-இன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் உறுப்பினர்கள் நேரடியாக பாஸ்புக் போர்ட்டலுக்கு செல்லாமல் எளிமையான மற்றும் வசதியான வடிவத்தில் பங்களிப்புகள், திரும்பப் பெறுதல் மற்றும் இருப்பு பற்றிய சுருக்கமான தகவல்களை ஒரே லாக்-இன் மூலம் காண முடியும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு திறமையான, வெளிப்படையான மற்றும் பயனாளர் சார்ந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்