பிரார்த்தனை கூடத்தில் கன்னியாஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.;

Update:2025-09-17 07:40 IST

கோப்புப்படம் 

திருவனந்தபுரம்,

மதுரையை சேர்ந்தவர் மேரி கொலாசிஸ்கா (33 வயது). இவர் கடந்த 3 ஆண்டுகளாக கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் சேவையாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மடத்தில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் மேரி கொலாசிஸ்கா தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக கன்னியாஸ்திரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி மேரி கொலாசிஸ்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி கொலாசிஸ்காவை சந்திக்க அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற பிறகுதான் மேரி கொலாசிஸ்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால், உறவினர்களுக்கும், இந்த தற்கொலை சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் கொல்லம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால் அதில் உள்ள விவரங்கள் குறித்து போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்