ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது

மடாதிபதியை மிரட்டி பணம் பறித்ததை ஸ்பூர்த்தி ஒப்புக் கொண்டுள்ளார்.;

Update:2026-01-23 14:57 IST

பெங்களூரு,

கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு மடத்தின் மடாதிபதியை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஹனிடிராப் முறையில் இளம்பெண் உள்பட 3 பேர் சிக்க வைத்திருந்தனர். பின்னர் இளம்பெண் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், அதே மடாதிபதியின் ஆபாச வீடியோ, புகைப்படம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்கவும் பணம் கேட்டு ஒரு இளம்பெண் மிரட்டல் விடுத்தார் அந்த மடாதிபதி வேலை விஷயமாக பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது மடாதிபதியை சந்தித்த இளம்பெண் ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்டு மிரட்டல் விடுத்தார்.

ஆனால் அவர் ரூ.1 கோடி கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து ரூ.4½ லட்சத்தை மடாதிபதி கொடுத்திருந்தார். இருப்பினும் தொடர்ந்து மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு இளம்பெண் மிரட்டல் விடுத்து வந்தார். இதையடுத்து, நடந்த சம்பவங்கள் பற்றி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் மடாதிபதி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த ஸ்பூர்த்தி (வயது 25) என்ற இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மடாதிபதியை மிரட்டி பணம் பறித்ததை ஸ்பூர்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். மடாதிபதியை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என ஸ்பூர்த்தியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்