போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு; இமாசல பிரதேசத்தில் 12 போலீசார் பணிநீக்கம்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் ஒருவர் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.;
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் ஒருவரை அந்த மாநில அரசு இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அங்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து இமாசல பிரதேச டி.ஜி.பி. அசோக் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 12 போலீசார் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கும், போதைப் பழக்கத்தை ஊக்குவிப்போருக்கும் இமாசல பிரதேசத்தில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.