பஞ்சாப், அரியானாவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் காயமடைந்தனர்.;

Update:2026-01-24 01:13 IST

சண்டிகர்,

பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. மேலும், கடும் குளிரும் நிலவி வந்தது.

இந்நிலையில், பஞ்சாப், அரியானாவில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. பல மாதங்களுக்குப்பின் கனமழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும், கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகின. சண்டிகரில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் காயமடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்