தெற்கு ரெயில்வேயில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

நாளை முதல் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி வரை இந்தியை பயன்படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.;

Update:2025-08-13 22:39 IST

புதுடெல்லி,

தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ரெயில்வே அலுவலக பணிகளில் இந்தி பயன்படுத்தப்படுகிறது என உறுதி செய்ய வேண்டும். இந்தி பயன்பாட்டை அதிகரிக்க இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

அஞ்சல் தொடர்புகள், ரெயில்வே ஆணை, பரிந்துரை உள்ளிட்டவற்றை இந்தியில் வெளியிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னோட்டத்தின்படி, நாளை முதல் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி வரை இந்தியை பயன்படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்