எல்லையில் 7-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.;

Update:2025-05-01 11:21 IST

ஸ்ரீநகர்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். சந்தேக நபர்கள், இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக அத்துமீறி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்தாலும் திருந்தியபாடில்லை. இந்த நிலையில், 7-வது நாளாக நேற்று இரவும் ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்