இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது
ஜம்மு அருகே உள்ள ஆர்.எஸ்.புராவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் ஊடுருவ முயன்றார்.;
கோப்புப்படம்
ஜம்மு காஷ்மீர்,
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வார்கள். அவர்களை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தும், விரட்டியடித்தும் வருவர்.
இந்த நிலையில், ஜம்மு அருகே உள்ள ஆர்.எஸ்.புராவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் ஊடுருவ முயன்றார். அந்த நபரை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைதுசெய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட நபர் சிராஜ் கான் என்பதும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பாகிஸ்தான் கரன்சியை மீட்ட எல்லை பாதுகப்புப் படையினர், இந்திய எல்லைக்குள் ஊடுருவியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.