நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 21 வரை நடைபெறும்: மத்திய மந்திரி ரிஜிஜூ
சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 21 வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.