பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர இன்ஜினியர் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி

மதுசூதன் ராவின் உடல் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கவாலிக்கு கொண்டு செல்லப்பட்டது.;

Update:2025-04-24 17:28 IST

அமராவதி,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மதுசூதன் ராவ் என்பவர் கொல்லப்பட்டார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக மதுசூதன் ராவ் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு நடந்த பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த மதுசூதன் ராவ், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலம் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுசூதன் ராவின் உடல் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கவாலிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதோடு மதுசூதன் ராவின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்