ஐபோன் 17 இந்தியாவில் இன்று விற்பனை: அதிகாலை முதலே காத்திருக்கும் மக்கள் - கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் மோதலால் பரபரப்பு
ஐபோன் 17 விற்பனை இந்தியாவில் இன்று தொடங்குகிறது.;
மும்பை,
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த புதிய ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி ஐபோன் 17, ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 17 தொடர் செல்போன்களை வாங்குவதற்காக மும்பை பிகேசி பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் விற்பனை மையம் முன்பு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ல முற்பட்டதால் கூட்டத்துக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் தலையிட்டு மோதலை தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.