பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரிப்பு: சுரேஷ் கோபி

பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறினார்.;

Update:2025-11-11 08:29 IST

திருச்சூர்,

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற உள்ளாட்சி தேர்தலில் திருச்சூர் மாநகராட்சியில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று நம்புகிறேன். பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே படிப்படியாக அதிகரித்து, தற்போது உயர்ந்த நிலையை எட்டி உள்ளது. திருச்சூரில் பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். கேரள மக்களின் உண்மையான மனநிலையை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருச்சூருக்கு வர வேண்டும். அங்கு அவர்களுடன் கலந்துரையாடினால் தெரியவரும்.

உள்ளாட்சி தேர்தலில் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து பா.ஜனதா போட்டியிட்டால், திருச்சூர் மாநகராட்சி பா.ஜனதா ஆளுமைக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்