வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.;

Update:2025-11-11 07:34 IST

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்குப்பதிவில் புதிய சாதனையைப் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள், தாங்கள் வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்