சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி

இந்தியா , சவுதி அரேபியா இடையேயான உறவு வரலாற்று சிறப்பு மிக்கது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-22 11:00 IST

டெல்லி,

2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி புறப்பட்டார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

சவுதி அரேபியா செல்வதற்குமுன் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சவுதி அரேபியாவின் ஜுடா நகருக்கு புறப்பட்டுவிட்டேன். அங்கு பல்வேறு ஆலோசனை கூட்டங்கள், சந்திப்புகளில் பங்கேற்க உள்ளேன். இந்தியா , சவுதி அரேபியா இடையேயான உறவு வரலாற்று சிறப்பு மிக்கது' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்