மராட்டியத்தில் மழை வெள்ள பாதிப்பு; விவசாயிகளுக்கு ரூ.31,628 கோடி நிவாரணம் - மாநில அரசு அறிவிப்பு
பயிர் சேதம் அடைந்த ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.;
Image Courtesy : ANI
மும்பை,
மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக 68 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பை கண்டது. இந்த நிலையில் பருவமழை சேதத்தால் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்காக அரசு ரூ.31 ஆயிரத்து 628 கோடி நிவாரணம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் பயிர் சேதம் அடைந்த ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
மேலும் விரைவில் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதற்கு மத்தியில் நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு மாநில அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.