குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று பொய் வாக்குறுதி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.;

Update:2025-11-05 04:00 IST

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, வைஷாலி மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது:-

ஆட்சிக்கு வந்தால், குடும்பத்துக்கு ஒருவர்வீதம் அரசு வேலை வழங்குவதாக இந்தியா கூட்டணி பொய் சொல்கிறது. அவ்வளவு பணம் எங்கிருந்து வரும்? முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எதிராக ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில், பீகாருக்கு ரூ.2 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகால மோடி ஆட்சி, ரூ.15 லட்சம் கோடி அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே பீகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற முடியும். எனவே, காட்டாட்சிக்கு வாக்களிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளால் 5-வது இடத்துக்கு வந்துள்ளது. விரைவில் 3-வது இடத்துக்கு முன்னேறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்