'ஏழைகளின் நிலத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் அபகரித்தது' - பிரதமர் மோடி தாக்கு

நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.;

Update:2025-07-18 14:56 IST

பாட்னா,

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மோதிஹரி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும். ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியால் நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் ஏழை மக்களின் நிலத்தை அபகரித்தனர்.

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சியில் மிகப்பெரிய குறைபாடு இருந்தது. ஏழைகளின் முன்னேற்றம் பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களின் பெயரில் அவர்கள் அரசியல் மட்டுமே செய்தனர்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்