நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விவாதிக்கத் தயார் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.;

Update:2025-07-20 19:30 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந்தேதி(நாளை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விவாதிக்கத் தயார். 'ஆபரேசன் சிந்தூர்' பற்றிய விவரங்கள் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது இந்த தீர்மானத்தை முன்வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்