பெண் நீதிபதியை உதைத்து தள்ளி தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்கள் - ஜெய்ப்பூரில் பரபரப்பு

பூர்ணிமாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடினர்.;

Update:2025-10-23 07:50 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பயிற்சி நீதிபதியான பூர்ணிமா ஜனகல் (வயது 25). இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வாகனத்தை காலால் உதைத்து தள்ளினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பூர்ணிமா ஜனகல், பலத்த காயம் அடைந்தார்.

இதனையடுத்து பூர்ணிமாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து பெண் நீதிபதி பூர்ணிமா ஜனகல், போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்